சுடச்சுட

  

  குமாரபாளையம் ஐயப்பன் கோயிலில் பிரமோற்சவ வழிபாடு

  By குமாரபாளையம்,  |   Published on : 27th December 2016 02:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sabari1

   

  குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோயிலில் 22-ம் ஆண்டு பிரமோற்சவ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தீப, தூப ஆராதனையும், சிறப்பு அலங்காரத்துடன் மண்டல பூஜையும் நடைபெற்றது.
   இக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் புஷ்பாஞ்சலியும், பிரமோற்சவ வழிபாடும் நடைபெறுவது வழக்கம். இவ் விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், உச்சபூஜை, பஞ்ச கவ்யம் மற்றும் பகவதி சேவை வழிபாடுகள் நடத்தப்பட்டன. 22-ம் தேதி பள்ளி வேட்டை, பள்ளி கருப்பா மற்றும் சயனவாசம் ஆகியன நடைபெற்றன.
   இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஐயப்பனுக்கு அஷ்ட திரவிய மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மண்டல பூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் மற்றும் தீப, தூப ஆராதனையும், புஷ்பாஞ்சலி வழிபாடும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜன.14-ல் அரங்கநாதர் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணமும், மாலையில் கற்பூர ஆழி பிரதட்சணம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai