சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில், 63 நாயன்மார்கள் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.
     திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் துணைக்கோயிலான சுகுந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில், சிவகாமியம்மை உடனமர் சிதம்பரேஸ்வரர் 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது.
     பஞ்ச வாத்திய முழக்கங்களுடன் நறுமண மலர்களால் கைலாசநாதருக்கு பூச்சொரிதல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடி உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai