சுடச்சுட

    

    தேசிய திறனாய்வுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: நாமக்கல் போலீஸ் மோப்ப நாய் சாதனை

    By நாமக்கல்,  |   Published on : 27th December 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் மோப்ப நாய் அரசி தேசிய அளவிலான திறனாய்வுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
     நாமக்கல் மாவட்ட காவல் துறையில் உள்ள துப்பறியும் நாய் அரசி, அண்மையில் கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற 60ஆவது அகில இந்திய அளவிலான வெடிகுண்டு கண்டுபிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் பெற்றது.
     இந்த மோப்ப நாய் கடந்த மாதம் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற மோப்ப நாய்களுக்கான திறனாய்வுப் போட்டிகளில் பங்கேற்று வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்று, அதன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai