சுடச்சுட

    

    நாளை தளிகை கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம்

    By நாமக்கல்,  |   Published on : 27th December 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில், சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை (டிச.28) நடைபெறவுள்ளது.
     தளிகை கிராமத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமுக்கு, கோட்டாட்சியர் எம்.ராஜசேகரன் தலைமை வகிக்கிறார். இதில், தளிகை உள்வட்டத்துக்குள்பட்ட தளிகை, நரவலூர் அக்ரஹாரம், நரவலூர் தொட்டிபாளையம் ஆகிய வருவாய்க் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோட்டாட்சியரிடம் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், முகாமில் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் என நாமக்கல் வட்டாட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai