சுடச்சுட

  

  மக்கள் குறை தீர்க்கும் நாள்: ரூ.1.68 லட்சம் நலத் திட்ட உதவி அளிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 27th December 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 544 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
   கூட்டத்தில், கல்வித் துறையின் சார்பில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித் துறையால் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 128 பயனாளிகளுக்கு ரூ.1,67,740 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன், கலால் உதவி ஆணையர் புகழேந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai