சுடச்சுட

  

  மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By குமாரபாளையம்,  |   Published on : 27th December 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரியும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும் குமாரபாளையத்தில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, குழுத் தலைவர் சமர்ப்பா குமரன் தலைமை வகித்தார். தமிழின பாதுகாப்பு இயக்கத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். காவிரி ஆற்றில் துணிகரமாக நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளைக்கு எதிராகவும், காவிரி ஆற்றைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோர் தாக்கப்பட்டு வருகின்றனர். மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய முகிலன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
   இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இ.கம்யூ. கட்சியின் முன்னாள் நகரச் செயலர் சி.ஈஸ்வரன், நிர்வாகிகள் மாதேஸ்வரி, செந்தில்குமார், பகலவன், இளங்கோ, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai