சுடச்சுட

    

    மோகனூர் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியதில் படுகாயமடைந்த 4 வயது குழந்தை உயிரிழந்தது.
     நாமக்கல் மாவட்டம், மோகனூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் முரளி (32). இவர், மனைவி சுமதி (25), மகன் விகாஷ் (4), 6 மாத ஆண் குழந்தை திவா, ஆகியோருடன் திருச்செங்கோடு அருகே குட்டிமேய்க்கன்பட்டியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
     இந்த நிலையில் கோயில் திருவிழாவுக்காக அண்மையில் முரளி குடும்பத்துடன் மோகனூர் வந்துள்ளார். திங்கள்கிழமை காலை மோகனூர்-நாமக்கல் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, சுமதி குழந்தைகளுடன் சாலையைக் கடக்க முயன்றார்.
     அப்போது அந்க வழியாக மோகனூர் நோக்கிச் சென்ற லாரி திடீரென குழந்தை விகாஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு மோகனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனேவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai