சுடச்சுட

  

  வர்தா புயல் பாதிப்பு மீட்புப் பணி: பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

  By நாமக்கல்,  |   Published on : 27th December 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் வர்தா புயல் பாதிப்பு மீட்புப் பணியில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 65 துப்புரவுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
   சென்னையில் வர்தா புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க, மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு நிவாரணப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 65 பணியாளர்கள், சென்னைக்கு மீட்பு நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர்.
   அதன்படி, கடந்த 15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அடையாறு பகுதியில், நாமக்கல் மாவட்டப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 10 நாள்கள் பணிக்கு பின் அவர்கள் நாமக்கல்லுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.
   இந்த பணியை பாராட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai