சுடச்சுட

    

    ராசிபுரம் நகர பாஜக சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
     இதனையடுத்து, கச்சேரி சாலையில் உள்ள அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நகர பாஜக தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற பூஜையில், மாவட்டத் தலைவர் ஆர்.பி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட பொதுச் செயலர் ஆர்.செல்வகுமார், மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆர்.யு.ரகுபதி, நகர பொதுச் செயலர் கதிரேசன், கந்தசாமி, துணைத் தலைவர் தங்கவேல், டி.எஸ்.மாணிக்கம், முன்னாள் நகர பாஜக தலைவர் எஸ்.குமார், யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai