சுடச்சுட

  

  நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.
   புகைப்படக் கண்காட்சியைப் பேருந்து நிலையத்துக்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாக்கள், அளித்த நலத்திட்ட உதவிகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
   நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கி.மோகன்ராஜ், அ.க.ரமேஷ், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai