சுடச்சுட

  

  ஊராட்சியில் ஊழல், முறைகேடு: விசாரணை நடத்தக் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 28th December 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கபிலக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை மேற்கு தெருவைச் சேர்ந்த விழிப்புணர்வுக் குழு அமைப்பின் தலைவர் கே.எஸ்.விவேகானந்தம், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
   கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கபிலக்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட விவரத்தின் அடிப்படையில், அரசு விதிமுறைகளைப் பின்பற்றாதது தெரியவந்துள்ளது. ஊராட்சி மன்றக் கூட்டங்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
   இதனால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் கபிலக்குறிச்சி ஊராட்சித் தலைவராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றிய கலாராணி, அவரது கணவர் மணி, ஊராட்சி செயலர் சாமிநாதன், முறைகேடுகளுக்கு துணைபோன குடிநீர்க் குழாய் தளவாடங்கள், மின்பொருள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கையெடுத்து, ஊழல் முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai