சுடச்சுட

  

  கட்டிப்பாளையத்தில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்த வலியுறுத்தல்

  By நாமக்கல்,  |   Published on : 28th December 2016 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்டிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
   நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கட்டிப்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் அளித்த மனு விவரம்: நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, வேலகவுண்டம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கட்டிப்பாளையம் உள்ளது. இப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அப் பகுதி கிராம மக்கள் சுமார் 700 பேர் நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
   இருப்பினும், இப் பேருந்து நிறுத்தத்தில் அவ் வழியாக காலை 7.30 மணிக்குச் செல்லும் ஒரே ஓர் அரசு நகரப் பேருந்து மட்டுமே நின்று செல்கிறது. அதைத் தவற விட்டால், பேருந்துக்காக 5 கி.மீ. தொலைவில் உள்ள மாணிக்கம்பாளையத்துக்கும், 7 கி.மீ. தொலைவில் உள்ள வேலகவுண்டம்பட்டிக்கும் நடந்து செல்ல வேண்டும்.
   கடந்த 50 ஆண்டுகளாக நின்றுசென்ற அனைத்துப் பேருந்துகளும், சில மாதங்களாக நிறுத்தப்படுவதில்லை. இதனால், பயணிகளுக்கும், ஓட்டுநர், நடத்துநருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
   இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப் பகுதி கிராம மக்களின் நலன் கருதி கட்டிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai