சுடச்சுட

  

  கொல்லிமலையில் அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன், வாழவந்தி நாடு காவல் நிலைய போலீஸார் கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆலத்தூர் நாடு அல்லேரிபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (24), ராஜீவ்காந்தி (34) ஆகியோர் அனுமதி பெறாத துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரிப் பாகங்களுடன் மலையில் சுற்றித் திரிந்தைக் கண்டனர்.
   இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், ஒரு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்களைப் பறிமுதல் செய்தனர். இதுபோல் மலையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த, பைல் நாடு மேல்கழுகூரைச் சேர்ந்த பூபதி (34), மோகன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீஸார், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai