சுடச்சுட

  

  தமிழகத்தில் கலவரச் சூழலை உருவாக்க முயலுகிறார் ராம மோகன ராவ்

  By நாமக்கல்,  |   Published on : 28th December 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் தமிழகத்தில் கலவரச் சூழலை உருவாக்கும் சிந்தனையோடு பேசி இருக்கிறார் என மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
   தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் பாவை மஹாலில் பாஜக சார்பில், அக் கட்சியினருக்கு நடத்தப்படும் மாநில அளவிலான பயிற்சி முகாமின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை நாமக்கல் வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
   ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருக்குமா? என்கின்றனர்.
   இந்தக் கேள்வி ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போன்றதாகும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது உரிய துறையினர் நடவடிக்கையெடுக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இதைவிட கூடுதலான ஒத்துழைப்பு அளித்திருப்பார்.
   தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க அதிமுக ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும்.
   4 நாள்களுக்கு பிறகு இதுபோன்ற கருத்துகளைச் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
   தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் பேச்சு அரசியல் பேச்சாளர் பேசியதுபோல் உள்ளது.
   அரசியல் தலைவர்களில், குற்றம் செய்தவர்கள் அதில் இருந்து தப்பிக்க என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவார்களோ, அவை அத்தனையையும் ராம மோகன ராவ் பயன்படுத்தியிருக்கிறார், அவருடை பேச்சு அதிகாரியின் வார்த்தைகளாக அமையவில்லை.
   வருமான வரித் துறை சோதனை என்பது தனி அதிகாரம் படைத்த அமைப்புகள் கடைமையைச் செய்துள்ளன, பா.ஜ.க.வுக்கோ, மத்திய அரசுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
   நான்தான் தலைமைச் செயலர் என ராம மோகன ராவ் சொல்லி இருக்கிறார்.
   புதிய தலைமைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இந்தப் பேச்சு அரசியல் சாசனத்தை மீறியதாகும். இதை மாநில அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
   உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், அதிமுக தொண்டர்கள் தனக்கு பின்னால் வர வேண்டும் என்று ராம மோகன ராவ் எதிர்பார்க்கிறார். தமிழகத்தில் கலவரச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அவர் பேசியுள்ளார் என்பது தெரிகிறது.
   அதிமுக தலைமையோ, தொண்டர்களோ எந்த ஒருநிலையிலும், எந்தக் கால கட்டத்திலும், அநியாயத்துக்குத் துணை போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai