சுடச்சுட

  

  நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 12 லட்சம் மஞ்சள் ஏலம்

  By ராசிபுரம்,  |   Published on : 28th December 2016 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
   ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும்.
   இந்த வார ஏலத்தில் விரலி, உருண்டை, பனங்காலி போன்ற ரக மஞ்சள் 277 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 8,399 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 419 வரையும், உருண்டை ரகம் ரூ.7 ஆயிரத்து 999 முதல் அதிகபட்சமாக ரூ.8,609 வரையும், பனங்காலி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரத்து 685 -க்கும் விலை போனது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai