சுடச்சுட

  

  பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பு திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By பரமத்திவேலூர்,  |   Published on : 28th December 2016 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.56 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
   வீரணம்பாளையம் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் கட்டப்படும் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடப் பணி, ரூ. 11.38 லட்சம் செலவில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணி, பிள்ளைக்களத்தூர் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனியில் ரூ. 2.16 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
   மேட்டுப்பாளையம் பகுதியில் 3 பயனாளிகளுக்கு ரூ. 4.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆடு கொட்டகை, பில்லூர் ஊராட்சியில் ரூ.34.58 லட்சத்தில் கட்டப்படும் சமுதாயக் கூடம், சாலை மேம்பாட்டு பணி, குன்னமலை ஊராட்சியில் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டப் பணி, சித்தம்பூண்டி ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணி, செருகலை ஊராட்சியில் ரூ. 4.91 லட்சத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
   ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், சாந்தா, வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai