சுடச்சுட

    

    நடத்தையில் சந்தேகமடைந்துமனைவியைக் கொன்ற கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
     நாமக்கல்- திருச்சி சாலை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அசோகன் (55). இவர், நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரவுக் காவலராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லதா (52). தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
     கடந்த 22-ஆம் தேதி இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் அசோகன் வீட்டில் இருந்து சென்று விட்டார். வீட்டுக்குள் லதா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
     இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான அசோகனை தேடி வந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் அசோகன் சரணடைய முயன்றபோது, தனிப்படை போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
     மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் அசோகன் தெரிவித்தார். அவரை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai