Enable Javscript for better performance
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

    By ராசிபுரம்  |   Published on : 28th December 2016 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காளிப்பட்டி மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
     பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான கேப் ஜெமினி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மேனகா, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களைத் தேர்வு செய்தனர்.
     இதில் பி.காம், சி.ஏ., பி.பி.ஏ இறுதியாண்டு பயிலும் 151 மாணவர்கள் பங்கேற்றனர்.
     எழுத்துத்தேர்வு, குழுக் கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடைபெற்ற இத்தேர்வில் 55 மாணவர்கள் இறுதியில் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ஊதியத்தில் பணியில் சேருவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
     தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரித் தாளாளர் எம்.ஜி.பாரத்குமார், மேலாண் இயக்குநர்கள் பா.மஹேந்திரன், பா.மஹாஅஜய்பிரசாத், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின செயல் இயக்குநர் முனைவர் சாம்சன் ரவீந்தரன், கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.மு.வைத்தியநாதன், புல முதன்மையர் முனைவர் ஆண்ட்ரூஸ், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர், கணினித் துறை உதவிப் பேராசிரியர் எ.ஜோசப் இம்மானுவேல் ஆகியோர் பாராட்டினர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai