சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே தனியார் கல்லூரியில் வருமான வரித் துறையினர் சோதனை

  By ராசிபுரம்,  |   Published on : 28th December 2016 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
   ராசிபுரத்தை அடுத்த புதுசத்திரம் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமாக 3 பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.
   இந்தக் கல்வி நிறுவனங்களுக்கான அலுவலகம் புதுசத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளது. இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் வருமான வரித் துறையின் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
   சோதனையில் கல்லூரியின் வரவு, செலவு பதிவுகள், வங்கி கணக்குப் பதிவுகள் போன்ற ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
   மேலும், கல்லூரி ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
   கல்லூரியைத் தொடர்ந்து ராசிபுரம் நகரில் உள்ள கல்லூரி தலைவரின் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
   சென்னை, மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்துவந்த வருமான வரித் துறையின் அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
   செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்தச் சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai