சுடச்சுட

  

  அரசு ஓய்வூதியர்களுக்கான சலுகைகளை போக்குவரத்துக் கழகத்தினருக்கும் வழங்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 29th December 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தலைவர் எம்.சண்முகம் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. பொதுச் செயலர் டி.தாமோதரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படி 29 மாதங்கள் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை, இ.எல். விடுப்பு, ஊதியம் உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்கள், நிலுவையில் உள்ள பஞ்சப்படி ஆகியவை வழங்கப்படாமல் உள்ளது.
  வயதான காலத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுக்கணக்கில் ஓய்வு பணப் பலன்கள் நிலுவை வைத்திருப்பது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆள்படுத்தி உள்ளது. இதனால், நிலுவை பணப் பலன்கள் அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்.
  வயதான காலத்தில் உரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு ஓய்வூதியர்களுக்கு இருப்பது போல், மருத்துவ திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அரசு ஓய்வூதியர் மரணமடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதியாக, ரூ.50 ஆயிரம் வழங்குவதுபோல், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்.
  மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியருக்கு வழங்குவது போல், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய உயர்வை விரிவுப்படுத்த வேண்டும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது போல், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை தாமதம் இல்லாமல் அந்த மாதத்திலேயே நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். முன்னதாக, சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக சண்முகம், பொதுச் செயலராக தாமோதரன், பொருளராக சுந்திரபிரகாசம், துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai