சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
  இதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.ஆதிநாராயணன் தலைமையில், மாவட்டச் செயலர் பி.பெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் துரைசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நல்லாக்கவுண்டர், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் வி.கே.ராஜூ உள்ளிட்டோர் திரண்டனர்.
  ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற விவசாயிகளை, நுழைவு வாயில் முன்பு தடுத்து நிறுத்திய போலீஸார், 41 ஆண்கள், 21 பெண்கள் என மொத்தம் 62 பேரை கைது செய்தனர்.
  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல் பயிர் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai