சுடச்சுட

    

    கொல்லிமலையில் அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக, விவசாயியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் நிலைய எஸ்.ஐ. சந்திரன் மற்றும் போலீஸார் கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, பைல் நாடு சேரப்புள்ள வளைவு பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி (51) என்பவர், அனுமதி பெறாத துப்பாக்கியுடன் மலையில் சுற்றித்திரிந்துள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai