சுடச்சுட

    

    குமாரபாளையம் நகராட்சியில் 16 வார்டுகளில் மூன்று நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    By DIN  |   Published on : 29th December 2016 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நகராட்சியில் குடிநீர் விநியோக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கீழ்க்கண்ட 16 வார்டுகளைச் சேர்ந்த பகுதிகளில் வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.
    இந் நகராட்சியில் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் ஏற்கெனவே உள்ள இரண்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கும் இணைப்புக் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், வார்டு எண் 1, 2, 3, 10, 11, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 மற்றும் 33 ஆகிய 16 வார்டுகளில் குடிநீர் விநியோகம் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai