சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அரசுப் பொருள்காட்சி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டம் கடந்த 1.1.1997 முதல் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அரங்குகள், பல்வேறு தனியார் அரங்குகளுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருள்காட்சி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
    இக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அரசுப் பொருள்காட்சி நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai