சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 29th December 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    பேரணியை பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலை முன்பு துவங்கி, பேரணி பரமத்தி வேலூரின் முக்கியச் சாலைகள் வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    பேரணியில் பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் தலைக்கவசத்துடன் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai