சுடச்சுட

  

  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விதை விநியோகம்

  By DIN  |   Published on : 29th December 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொல்லிமலை வட்டாரம், சித்தூர்நாடு கிராமம், சுண்டக்காடு பகுதியில் தானம் அறக்கட்டளை மற்றும் வேளாண்மைத் துறை சார்பாக சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி தொகுப்பிலிருந்து ஓதுக்கப்பட்ட நிதி இலக்கீட்டின்படி சிறு குறு விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் செயல்விளக்கங்கள் மற்றும் விலையில்லாத விதை விநியோக முகாம் அண்மையில் நடைபெற்றது.
  இம் முகாமில் கொல்லிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்ரமணியம் தலைமை வகித்துப் பேசுகையில், காய்கறி சாகுபடி அவசியம் பற்றியும் சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் தொழில்நுட்பத் தகவல்களையும் தெரிவித்தார்.
  முகாமில் கொல்லிமலை வட்டார வேளாண்மை அலுவலர் தி.கெளதமன் கலந்து கொண்டு முள்ளங்கி சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும், அறுவடை பின்செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதல் தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு கூறினார்.
  மாநில திட்டக் குழுவின் வேளாண் பிரிவுத் தலைவர் முனைவர் ஜெகன்மோகன் சிறப்பு அமைப்பாளராகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விலையில்லாத காய்கறி விதைகள் வழங்கி பேசினார்.
  மேலும் அவர் பேசுகையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர்வு பற்றியும், மாநில திட்டக்குழு மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், விளைவித்த விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
  முகாமில், திட்டப் பொறுப்பாளர் பிரகாஷ், தானம் அறக்கட்டளையின் பங்களிப்பு மற்றும் விவசாயிகளின் திட்டச் செயல்பாடுகளை பற்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai