சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் ஆகிய கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    முன்னதாக, ராசிபுரம் அபயஹஸ்த ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றுதல் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் புதன்கிழமை அதிகாலை வேதபாராயணம், சுதர்சன ஹோமம், குபேர ஹோமம், தன்வந்திர் ஹோமம், மூலமந்திர ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன. பின்னர் வடமாலை, துளசி மாலை, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
    மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் அலங்காரம் செய்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து தங்க கவசம் சாத்தப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பின்னர் சுவாமி திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார்.
    இதே போல், ராசிபுரம் சேலம் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தினர். இதில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் மெட்டாலா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai