சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் காவிரி கரையோரம் உள்ள காவிரி ஆஞ்சநேயர் கோயிலில், 15-ஆம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் கணபதி ஹோமமும், 11 மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு பல்வேறு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    இதே போல் பாண்டமங்கலம் வெங்கட்ரமண பெருமாள் கோயில், சக்தி விநாயகர் கோயில், நன்செய் இடையாறு திருவேலிஸ்வர் கோயில் மற்றும் பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai