சுடச்சுட

    

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை நிர்வகிக்க மண்டல அலுவலகங்களை உருவாக்கக் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளை நிர்வகிக்க 6 மண்டல அலுவலகங்களை உருவாக்கி, அங்கு உதவி இயக்குநர் பணி இடத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     சங்க மாநில மாநாடு நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் எம்.மணிமொழி தலைமை வகித்தார். ஆசிரியர் மற்றும் காப்பாளர் கழக நிறுவனத் தலைவர் அ.சக்ரபாணி, மாநிலத் தலைவர் பாக்கியராஜ், பொதுச் செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க மாநில பொதுச் செயலர் ஆதிமூலம் வரவேற்றார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மு.ஆ.உதயக்குமார் பேசினார்.
     நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் இயங்கும் பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள், கல்வி தர மேம்பாடு, மாணவர் தனித் திறன் வளர்ச்சி, பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் போன்றவற்றுக்காக 32 மாவட்டங்களை 6 மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்.
     சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களை ஏற்படுத்தி, உதவி இயக்குநர் பணி இடத்தை உருவாக்கி அந்த மண்டலத்துக்குள்பட்ட ஆதிதிராவிடர் நலத் துறை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
     காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தாவரவியல், விலங்கியல், பொருளியல், அரசியல் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai