சுடச்சுட

    

    ஏல மையத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 30th December 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்தும், விலையும் அதிகரித்துள்ளன.
     பரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது.
     இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டுவந்து, தரத்துக்குத் தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 1,110 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.68.85 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.62.85 பைசாவுக்கும், சராசரியாக ரூ.64.65 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.65 ஆயிரத்து 83-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
     வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 2,506 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.70.99 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.62.19 பைசாவுக்கும், சராசரியாக ரூ.66.69 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 902-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்து இருந்தாலும், கொப்பரைத் தேங்காயின் விலையும் உயர்ந்திருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai