சுடச்சுட

  

  கந்து வட்டி, மீட்டர் வட்டி வசூல்: புகார் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை; ஆட்சியர் எச்சரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கந்து வட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பதாக புகார் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் எச்சரித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு கடும் வட்டி விதிப்பினை தடை செய்யும் நோக்கில், தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 நடைமுறையில் உள்ளது. இதன்படி, பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்களின் வாக்குறுதிகளான உடனடி கடன், மிக குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
   மேலும், உரிமம் பெறாத நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்பெற வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள், வங்கி பரிவர்த்தனை அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வேண்டும்.
   ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்பட மாட்டாது. பொதுமக்கள் கடன் பெறும் முன்னர் அதற்கான நிபந்தனைகள் ஒப்பந்தங்கள், வட்டி விகிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்து ஆண்டுக்கு எவ்வளவு வட்டி என்பதனைக் கண்டறிந்து அதன் பின்னர் கடன் பெறுவது குறித்த முடிவு எடுக்க வேண்டும்.
   கடன் வாங்கியவர்களிடமிருந்து கடன் தொகைக்கு தின வட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரைமுறை இல்லாத வட்டித் தொகையை கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி அல்லது கந்து வட்டியாக வசூலித்தால், தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 பிரிவு 4இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.30,000 அபராதம் வசூலிக்கப்படும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai