சுடச்சுட

  

  ஜிஎஸ்டி வரி விதிப்பு- உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

  By ராசிபுரம்,  |   Published on : 30th December 2016 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் வியாபாரிகள் சங்கம், உணவுப் பாதுகாப்பு துறை சார்பில், உணவுப் பாதுகாப்பு முறை குறித்தும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, வங்கி மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்தும் ராசிபுரத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
   இக் கூட்டத்துக்கு, ராசிபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். ராசிபுரம் ஸ்டாக்கிஸ்ட் அசோசியேஷன் சங்கத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். வியாபாரிகள் சங்கச் செயலர் ஜெ.டைட்டஸ் முன்னிலை வகித்தார். இதில், உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் எம்.கவிக்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உணவுப் பொருள் உற்பத்தி, விற்பனை குறித்த அரசு சட்ட விதிமுறைகள், தயாரிப்பின் போது பெற வேண்டிய உரிமம் குறித்து பேசினார்.
   வர்த்தக நிலையங்களில், சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். எந்த உணவுப் பொருள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் உரிய உரிமம் பெற வேண்டும். இனிப்பு விற்பனை நிலையங்களில் உணவுப் பொருள்கள் மீது அலுமினிய பேப்பர் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை விற்பனையைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
   மேலும், ராசிபுரம் வணிகவரித் துறை உதவி ஆணையர் டி.புஸ்பவதி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து விளக்கிப் பேசினார். ஜனவரி 1 முதல் 15 வரை வியாபாரிகள் இணையத்தில் ஜிஎஸ்டி படிவத்தில் தங்களது நிறுவனம் குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.
   எச்டிஎப்சி வங்கி உதவி மேலாளர் தினேஷ்குமார், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில், வங்கியின் மூலம் நடைமுறையில் உள்ள மூன்று வகை ஏடிஎம் கார்டுகள், 3 வகை ஸ்வைப்பிங் எந்திரம் போன்றவை குறித்து பேசினார். கூட்டத்தில் ராசிபுரம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், வியாபாரிகள் சங்கப் பொருளர் கே.எஸ்.ஆர்.எஸ்.மன்னார்சாமி, ரோட்டரி சங்கச் செயலர் ஏ.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai