சுடச்சுட

    

    நாமக்கல்லில் அரசுத் துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.
     நாமக்கல் மாவட்டத்தில் வருவாய், காவல், கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், உதவியாளர் நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தேர்வு தொடங்கியது. இத்தேர்வை மாவட்டத்தில் உள்ள சுமார் 4,000 அரசுப் பணியாளர்கள் எழுதுகின்றனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் புதன்கிழமை 500 பேர், வியாழக்கிழமை 118 பேர் தேர்வு எழுதினர். அரசின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், கணிதம் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வரை இத்தேர்வு நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai