சுடச்சுட

  

  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மேற்கு கடற்கரை நெட்டை தென்னங் கன்றுகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்தி: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மேற்கு கடற்கரை நெட்டை ரக தென்னங் கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. இந்த தென்னங் கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியன. கொப்பரைக்கு மிகவும் உகந்தது, எண்ணைய் சதவீதம் 68 முதல் 71 சதவீதம் வரை கொண்டுள்ளது.
   ஒரு டன் கொப்பரை எடுக்க சுமார் 5,000 முதல் 7,000 வரை காய்கள் மட்டுமே தேவைப்படும். இந்த ரக தென்னங் கன்றுகள் பாலீதின் பைகளில் நடவு செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ளன.
   தென்னை நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். 3 முதல் 4 மாதம் வரை வளர்ச்சியடைந்த தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ.50.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai