சுடச்சுட

  

  பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

  By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, சைக்கிள் பயணம் மேற்கொண்ட மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காமராஜர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
   மஹாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த பராக், தாமித் ஆகியோர் பசுமை இந்தியா திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துக்காக வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை 2,500 கி.மீ தொலைவு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
   கடந்த 5-ஆம் தேதி வாரணாசியில் பயணத்தை தொடங்கிய இவர்கள், அண்மையில் நாமக்கல் வந்தடைந்தனர். நாமக்கல் வந்த அவர்களை நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமையில் வரவேற்றனர்.
   பின்னர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினர். அதில் சைக்கிள் உபயோகிப்பதன் அவசியத்தையும், அதனால் ஏற்படும் பயன்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அருண்குமார், அருள்முருகன், பட்டயத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai