சுடச்சுட

  

  பெற்றோர்களுக்கான மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 30th December 2016 04:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வட்டார வள மையத்துக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பரமத்தி வட்டார பள்ளி ஆயத்த முகாம் பெற்றோர்களுக்கு மூளைக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
   பரமத்தி வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இப் பயிற்சியில், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார். நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாணிக்கவாசகம், மூளைக் காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார். நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் மணிவண்ணன் நீர்நிலைகளில் எவ்வாறு கொசுக்கள் பரவுகின்றன. அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
   இப் பயிற்சியில், பரமத்தி வட்டார பள்ளி ஆயத்த முகாம் பெற்றோர்கள், மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியை மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் புவனேஷ்வரி, நிர்மலாதேவி, அனிதாகுமாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பாசிரியர்கள் முரளிதரன், பெரியசாமி, கவிதா மற்றும் மகேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai