Enable Javscript for better performance
மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள்

    By ராசிபுரம்,  |   Published on : 30th December 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெண்ணந்தூர் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ், அனைத்து வேளாண்மை பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு.சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: வெண்ணந்தூர் வட்டாரத்தில் அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனக் கருவி மானிய விலையில் தரப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் சிட்டா, அடங்கல், மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றுடன் வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, 100 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வெண்ணந்தூர் வட்டார விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai