சுடச்சுட

  

  மாவட்டத்தில் 100 சதவீதம் வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு: ஆட்சியர்

  By ராசிபுரம்,  |   Published on : 30th December 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில், வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல், ஜன்தன் திட்ட வங்கி கணக்குதாரர்களுக்கு ரூபே கார்டு அட்டை வழங்குதல் ஆகிய பணிகளை 100 சதவீதம் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
   வெண்ணந்தூர் பேரூராட்சி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கிய நபர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்குதல், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கிய நபர்களுக்கு ரூபே கார்டுகளையும், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கிப் பேசியது:
   அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். இனிவரும் காலங்களில் மக்கள் நேரடி பணப் பரிமாற்றத்தை தவிர்த்து, வங்கி பணப் பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
   நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் வங்கிக் கணக்கை தொடங்குவதற்காக இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு. இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காதவர்கள் உடனடியாக புதிய வங்கிக் கணக்கினை தொடங்கிக் கொள்வதோடு, வங்கி பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
   இம் முகாமில் வங்கி அலுவலர்கள், தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai