சுடச்சுட

    

    ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பதவி ஏற்பு, ரத்த தான முகாம்

    By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் ரத்த தான முகாம் அண்மையில் நடந்தது.
     ரத்த தான முகாமை செல்வம் கல்லூரி ரோட்டரி சங்கம் மற்றும் நாமக்கல் கல்வி நகரம் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தின. இம் முகாமில் 73 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர். கல்லூரி நிர்வாக இயக்குநர் கே.எஸ்.அருள்சாமி, முதல்வர் என்.ராஜவேல், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டி.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். நாமக்கல் மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் எ.அன்புமலர் மற்றும் செவிலிய அலுவலர்கள் ரத்தம் பெற்றுக் கொண்டனர். கல்லூரி ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் எ.எழிலரசு நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai