சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: பார்வையாளர் ஆய்வு

  By நாமக்கல்,  |   Published on : 30th December 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தப் பணிகளை மேற்பார்வையிடும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய முதன்மைச் செயல் அலுவலருமான ஆர்.சுடலைக்கண்ணன் நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயராஜ், கோட்டாட்சியர்கள் ம.ராஜசேகரன், ஜி.மகாத்மா மற்றும் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai