சுடச்சுட

  

  குமாரபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

  By DIN  |   Published on : 31st December 2016 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையத்தில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  இந்த ஊர்வலத்துக்கு குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமை வகித்தார். காவல் நிலையம் முன்பு தொடங்கி சேலம் பிரதான சாலை, பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் மீண்டும் காவல் நிலையம் முன்பாக முடிவடைந்தது. விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். குடித்துவிட்டோ, செல்போன் பேசியபடியோ வாகனத்தை ஓட்டக் கூடாது. விபத்து நேரிட்டாலும், உயிரினைப் பாதுகாக்க தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. காவலர்கள், பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்தபடி இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai