சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் பகவதியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

  By DIN  |   Published on : 31st December 2016 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள பகவதியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
  இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று கரகம் பாலித்து, தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று காப்புக் கட்டப்பட்டது. சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், பொதுக் கட்டளையும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். திங்கள்கிழமை பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 4-ஆம் தேதி மாலை பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று நீராடி பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, கோயில் முன் அமைக்கப்படும் பூக்குண்டத்தில் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர். 5-ஆம் தேதி பொங்கல் மாவிளக்கு பூஜையும், ஊஞ்சல் உற்சவமும்,6-ஆம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மேலத்தெரு பகவதியம்மன் கோயில் செயல் அலுவலர், விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai