சுடச்சுட

  

  பாதுகாப்பின்றி பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு

  By DIN  |   Published on : 31st December 2016 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையத்தில் பாதுகாப்புக் கவசம் அணியாமலும், உயிருக்கு அபாயம் ஏற்படும் வகையிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றியதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது.
  குமாரபாளையம்-எடப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் தேங்கியதோடு, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.
  இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடைப்பை அகற்ற முடியாததால் சாக்கடைக்குள் இறங்குமாறு அதிகாரிகள் கூறியதன்பேரில், துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடைக்குள் இறங்கி துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
  இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, நகராட்சி அலுவலர்களிடம் அரசு விதிகளின்படி துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாப்புக் கருவிகளுடன் பணியாற்ற வேண்டும். போதிய முன்னெச்சரிக்கையின்றி பணியில் ஈடுபட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்ததோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாக்கடைக்குழிக்குள் இறங்கி மனிதர்களை செயல்பட வைப்பது கண்டிக்கத்தக்கது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai