சுடச்சுட

  

  முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.115 கோடியில் சிகிச்சை

  By DIN  |   Published on : 31st December 2016 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 52,510 பேருக்கு ரூ.115.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் உலக தரத்தில் மருத்துவ சேவைகள் அளிக்கபட்டு வருகின்றன. தரமான அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பதிவு பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
  இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் செலவில் சிகிச்சைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை சிசிக்சைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
  மேலும், இத் திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் உட்பட 1,016 வகையான நோய்களுக்கு சிசிக்சைகள் பெறும் வசதியும், 113 தொடர் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளும், 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கான சிகிச்சைகளுக்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு உள்ளவர்களுக்கு குடும்ப அட்டையின் நகலைக் கொண்டு, விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
  குடும்பத்திலுள்ள நபர்களுக்கு ஏதேனும் உயர் மருத்துவ சிசிக்சைகள் தேவைப்பட்டால் இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
  மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்து பதிவு செய்து கொள்வதற்கு நிரந்தர மையம் செயல்பட்டு வருகிறது.
  நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,17,544 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் தகுதியான 4,08,657 குடும்பங்கள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 4,08,138 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
  நாமக்கல் மாவட்டத்தில் 11.1.2012 முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 57,973 பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு, இதுவரை 54,144 பேருக்கு ரூ.126.98 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  இதுவரை சிசிக்சை பெற்றுள்ள 52,510 பேருக்கு ரூ.115.97 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதற்கான நிதியுதவி அந்தந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  மீதமுள்ள 205 பேர் அளித்த விண்ணப்பங்கள் மீது கூடுதல் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 88 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 77 விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai