சுடச்சுட

  

  பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வில், காக்காவேரி முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை மாணவர் கே.செளந்திரராஜன், இரண்டாம் ஆண்டு தானியங்கி துறை மாணவர் ஜி.ஆனந்த் கணினி துறை மாணவர்கள் எஸ்.அசோக்குமார், எம்.நவநீதன், உள்ளிட்டோர் 700-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
  மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மாணவி ஜி.கவிப்பிரியா, இரண்டாம் ஆண்டு கணினி துறை மாணவி ஆர்.ஸ்ரீசரண்யா, மாணவர்கள் வி.தமிழரசன், பி.கவின், எம்.யோகேஸ்வரன் உள்ளிட்டோர் 700-க்கு 699 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், முதலாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் பி.விக்னேஷ், கணிணி துறை மாணவர் ஜி.கோபிசங்கர் உள்ளிட்டோர் 800-க்கு 792 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதே போல, மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறை, கம்ப்யூட்டர் துறைகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
  மேலும் 700-க்கு 700 நான்கு பேரும், 699 ஐந்து பேரும், 698-க்கு மேல் ஏழு பேரும், 697-க்கு மேல் ஏழு பேரும், 696-க்கு மேல் 9 பேரும், 695-க்கு மேல் 17 பேரும், 690-க்கு மேல் 43 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக இக்கல்லூரி தொடர்ந்து வாரியத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  மாநிலத்தில் முதலிடம் மற்றும் சிறப்பிடங்கள் பெற்ற மாணவ, மாணவியரையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களையும் கல்லூரியின் தாளாளர் ஆர்.ராமசாமி, செயலர் ஆர்.ஜெயப்பிரகாஷ், பொருளர் ஆர்.பிரேம்குமார், முதல்வர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai