Enable Javscript for better performance
இலவச பொது மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் இலவசப் பொது மருத்துவம், கண்நோய், பல் சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை நம்ம குமாரபாளையம் அமைப்பு, ஜேகேகே நடராஜா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனை, ஈரோடு வாசன் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தின.
     நம்ம குமாரபாளையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம்சரவணா தலைமை வகித்தார். எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் பி.இளங்கோ, எஸ்எஸ்எம் மருந்தியல் கல்லூரித் தலைவர் கே.எஸ்.இளவரசன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஆர்.வினோத்குமார் வரவேற்றார். முகாமில், பொது மருத்துவம், கண்நோய் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஜேகேகே நடராஜா பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai