Enable Javscript for better performance
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

    By ராசிபுரம்,  |   Published on : 28th November 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.
     இதையடுத்து மருத்துவமனை பணியாளர்களுடன் பொதுமக்கள் பலர் பங்கேற்று மனிதச் சங்கிலி அமைத்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் தனது உடலை தானம் வழங்குவதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்த சமூக சேவகர் என்.ஏ.முத்து உடல் உறுப்பு தானம் குறித்துப் பேசினார்.
     மருத்துவர்கள் ப்ரீத்தி, மருத்துவப் பணியாளர்கள் பிரபாகரன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai