Enable Javscript for better performance
தனியார் நூற்பாலையில் மீட்கப்பட்ட 41 சிறுமிகள்: இன்று விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நூற்பாலையில் மீட்கப்பட்ட 41 சிறுமிகள்: இன்று விசாரணை

    By நாமக்கல்,  |   Published on : 28th November 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் நூற்பாலையில் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்ட 41 சிறுமிகளிடம் அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்துகின்றனர்.
     இதன் பிறகு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கையெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், எருமபட்டி அருகே தனியார் நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டிருந்த திருவண்ணாமலை, கரூர் சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் 41 பேரை வருவாய், காவல் துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் சோதனை மேற்கொண்டு மீட்டனர். 41 பேரும் நாமக்கலில் உள்ள 2 காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
     ஆலையில் உடல், மன ரீதியில் தொல்லை இருந்ததாக மீட்கப்பட்ட சிறுமிகள் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் மற்றும் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்துகின்றனர்.
     அப்போது சிறுமிகளுக்கு ஆலையில் நேர்ந்த அத்துமீறல்கள், பணிச்சூழல், பணிக்கு அழைத்து வரும்போது ஆலை நிர்வாகத்தால் முன்பணம் கொடுக்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சிறுமிகள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆலை நிர்வாகம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai