Enable Javscript for better performance
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதில்லை: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதில்லை: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 28th November 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
     மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து இருப்பதைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
     இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, செயலர் சி.தனராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
     அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதில்லை என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் போராட்டத்தில் கலந்து கொள்ளாது.
     மேலும் பணப் புழக்கம் பழைய நிலைக்கு திரும்பும் வரை சுங்க சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல் லாரிகளுக்கு வியாபாரிகளால் வழங்கப்படும் வாடகை பணம் 500, 1,000 நோட்டுகளாக இருப்பதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழைய 500, 1,000 நோட்டுகளைப் பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai