Enable Javscript for better performance
ஊராட்சிகளில் குப்பைகள் மூலம் உரம்: மரக்கன்றுகளுக்கு பயன்படுத்த ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சிகளில் குப்பைகள் மூலம் உரம்: மரக்கன்றுகளுக்கு பயன்படுத்த ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊராட்சிகளில் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.
    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி சேவை மையக் கட்டடம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், செட்டிபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.3.29 லட்சம் மதிப்பீட்டில் சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி பராமரித்து வரும் பணி, கூத்தம்பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.24 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி பராமரித்துவரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    இதுபோல், அகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி சேவை மையக் கட்டட பணி, இதே ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.37 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி பராமரித்து வரும் பணி, கொன்னையார் ஊராட்சி அகரம் சின்னக்குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20.46 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர் வாரி ஆழப்படுத்தும் பணிகளை
    ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    இதுபோல், புத்தூர் கிழக்கு ஊராட்சி, புத்தூர் சிறிய ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.64 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி பராமரித்து வரும் பணி, பொம்மம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ.52.61 லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் முதல் பொம்மம்பட்டி வரை 2.34 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    அதனைத் தொடர்ந்து, முசிறி கிராமம் மற்றும் புத்தூர் கீழ்முகம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் நாமக்கல் மாவட்ட கனரக வாகன கட்டுமான தொழிற்பேட்டையினையும், அதற்கான இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கான இடங்களையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    அப்போது பணிகளைத் தரமாகவும், தாமதமின்றி விரைவாக முடித்திட வேண்டும். ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை பிரிக்கப்பட்டு, உரமாகத் தயாரிக்கப்படும் அனைத்தையும் வீணாக்காமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகளுக்கு உரமாகப் பயன்படுத்த வேண்டும்.
    இத் திட்டத்தின் கீழ் நடப்படுகின்ற அனைத்து மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரித்து, தொடர்ந்து நீர் ஊற்றி பாதுகாப்பாக வளர்த்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
    ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வெங்கடாசலம், பி.ரமேஷ், உதவிப் பொறியாளர்கள் பி.செந்தில், சி.மலர்விழி, பணி மேற்பார்வையாளர்கள் ஆர்.பசுபதி, ஆர்.கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai